கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்

மழையால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-10-23 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள வீடுகளின் அருகில் கொட்டகை அமைத்து ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த 1 மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கால்நடைகள் பாதிக்கப்பட்டன.மேலும், பலவீனம் அடைந்ததால் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பருவ மழை தொடங்க உள்ளதால் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தி உரிய சிகிச்சை மற்றும் நோய் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அப்பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்போர் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்