கிணற்றில் தவறி விழுந்த மெக்கானிக் பலி

கிணற்றில் தவறி விழுந்த மெக்கானிக் பலியானார்

Update: 2022-08-19 12:23 GMT

சமயபுரம், ஆக.20-

சிறுகனூர் அருகே உள்ள புதூர் உத்தமனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிவா (வயது 17). இவர் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு சிவா தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச மோட்டாரை இயக்க சென்ற போது, கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் 20 அடி ஆழம் தண்ணீர் இருந்ததால், அதில் அவர் மூழ்கி இறந்தார். லால்குடி தீயணைப்பு வீரர்கள் பிணத்தை மீட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்