நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;
ஏற்காடு:
ஏற்காடு பில்லேரி கிராமத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பிச்சமுத்து மகன் ரமேஷ் (வயது 38) என்பவர் வீட்டில் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் ரமேசை கைது செய்து அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.