வீட்டில் 520 கிலோ ரேஷன்அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது

திருச்சிற்றம்பலத்தில் வீட்டில் 520 கிலோ ரேஷன்அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-16 20:02 GMT

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் யாராவது பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்கிறார்களா? என்பதையும் கண்காணித்து வருகிறார்கள்.இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுனர். அப்போது திருச்சிற்றம்பலத்தில் கணேசன் (வயது 50) என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு 520 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கணேசனை கைது செய்த போலீசார் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.இந்த அரிசியை குறைந்த விலைக்கு பொதுமக்களிடம் இருந்து வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்