கம்பீரமாக உலா வந்த புலி

மசினகுடி-சிங்காரா சாலையில் கம்பீரமாக புலி உலா வந்தது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.;

Update: 2023-06-15 19:15 GMT

கூடலூர்

மசினகுடி-சிங்காரா சாலையில் கம்பீரமாக புலி உலா வந்தது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

முதுமலை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் உள் மற்றும் வெளி மண்டலத்துடன் இணைத்து 688 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டது. இங்கு காட்டுயானைகள், புலிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இதனால் முதுமலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வனத்துறை மற்றும் தனியார் வாகனங்களில் சவாரி செய்கின்றனர். அப்போது வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர்.

இதற்கிடையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி, சிங்காரா வனத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புலிகள் அடிக்கடி அங்குள்ள சாலையை கடப்பது வழக்கமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்லும்போது அவ்வப்போது புலியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

வீடியோ வைரல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மசினகுடியில் இருந்து சிங்காரா செல்லும் சாலையில் புலி ஒன்று கம்பீரமாக நடந்து வந்தது. சாலையில் வாகனங்கள் மற்றும் அதில் சுற்றுலா பயணிகள் இருப்பதை கண்டும் புலி மெதுவாக உலா வந்தது.

தங்களது கண் எதிரே புலி நடந்து செல்வதை கண்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்து, அந்த காட்சியை செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் சாலையில் வாகனங்கள் இயக்கப்படாமல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் வனத்துக்குள் புலி சென்றது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்