தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு

நெல்லையில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-17 18:45 GMT

நெல்லையில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்

நெல்லை பாளையங்கோட்டை, பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் ஹெலிகாப்டர் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்து சென்றது. சில நேரங்களில் இதுபோன்று ஹெலிகாப்டர்கள், விமானங்கள் ஒருமுறை மட்டுமே கடந்து செல்லும்.

ஆனால் இந்த ஹெலிகாப்டர் அதே பகுதியில் 3 முறைக்குமேல் தாழ்வாக பறந்து சென்றது. இதனை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். சிறுவர்கள், குழந்தைகள் பார்த்து மகிழ்ந்தனர்.

பரபரப்பு

நெல்லை அருகே விஜயநாராயணத்தில் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளம் உள்ளது. எனவே அங்குள்ள ஹெலிகாப்டர் மாநகர பகுதியில் பறந்து இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஐ.என்.எஸ். கடற்படை தள அதிகாரியிடம் கேட்ட போது, ஐ.என்.எஸ்.-க்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் சில நேரங்களில் கண்காணிப்பு பணிக்காக தாழ்வாக பறப்பது உண்டு. ஆனால் நேற்று இங்கிருந்து எந்த ஹெலிகாப்டரும் பறக்கவில்லை என தெரிவித்தனர்.

முப்படை தளபதிகள் கூட்டம்

தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அடுத்த வாரம் தூத்துக்குடியில் முப்படை தளபதிகளின் கூட்டம் நடக்கிறது. இதற்காக பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்