மாஞ்சோலையில் கோவில் முன் படுத்திருந்த சிறுத்தை

மாஞ்சோலையில் சிறுத்தை கோவில் முன் படுத்திருந்தது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2023-06-08 18:41 GMT

அம்பை:

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேபோல் வனப்பகுதியிலும் வெயிலின் தாக்கம் இருப்பதால், அதில் இருந்து தப்பிக்க வனவிலங்குகள் பல்வேறு வழிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் உள்ள வடக்கத்தி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சிலர் சாமி கும்பிட சென்றனர்.

அப்போது, கோவிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகை நிழலில் குட்டி சிறுத்தை ஒன்று படுத்து இளைப்பாறி கொண்டிருந்தது. இதைப்பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், பதுங்கி இருந்து தங்களது செல்போன்களில் சிறுத்தையை புகைப்படம் எடுத்தனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்