தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி- பொதுமக்கள் பீதி

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி- பொதுமக்கள் பீதி

Update: 2023-08-03 21:08 GMT

தாளவாடி

தாளவாடியை அடுத்த திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 41) விவசாயி. இவர் நேற்று இரவு 8 மணி அளவில் தனது வீட்டின் முன்பு ஏதோ உறுமுவது போன்ற சத்தம் கேட்டது. சத்தம் கேட்டதும், அவர் வீட்டின் கதவை திறந்து பார்த்தார். அப்போது வீட்டின் சுற்றுச்சுவர் கதவு அருகே சிறுத்தை ஒன்று நின்று கொண்டிருந்ததை கண்டதும், பீதியில் உறைந்து போனார். உடனே அவர் கதவை பூட்டிவிட்டு மாடிக்கு சென்றார். பின்னர் அங்கு நின்றபடியே சிறுத்தைப்புலியை தன்னுடைய செல்போன் மூலம் புகைப்படம் எடுத்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த சிறுத்தைப்புலி, அருகில் இருந்த கரும்பு காட்டுக்குள் சென்று பதுங்கியது. இந்த தகவல் பரவியதும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்