சினைமாட்டை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி

தேவர்சோலை அருகே சினைமாட்டை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது.

Update: 2023-05-20 19:15 GMT

கூடலூர்

தேவர்சோலை அருகே சினைமாட்டை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது.

சினைமாடு

கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் வசிப்பவர் நஞ்சுண்டன். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நஞ்சுண்டன் நேற்று முன்தினம் வழக்கம்போல் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார். ஆனால் மாலையில் சுமார் 6 வயதான சினை மாடு வீடு திரும்பவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று பல இடங்களில் சினைமாட்டை நஞ்சுண்டன் தேடினார். அப்போது மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் சிறுத்தைப்புலி கடித்து சினைமாடு உயிரிழந்து கிடப்பதை கண்டார். இதுகுறித்து கூடலூர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

நிவாரண தொகை

பின்னர் நெலாக்கோட்டை கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த சினைமாட்டின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுத்தைப்புலி கடித்து சினைமாடு இறந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் உயிரிழந்த மாட்டின் உரிமையாளருக்கு கூடலூர் வனகோட்ட உதவி வன பாதுகாவலர் கருப்பையா நிவாரண தொகையாக ரூ.30 ஆயிரத்தை காசோலையாக வழங்கினார்.

இது குறித்து வனத்துறையினர் அப்பகுதி மக்களிடம் கூறும்போது, எஸ்டேட் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது. மேலும் தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தனியாக நிற்க கூடாது. குழுவாக சேர்ந்து கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்று எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்