தக்கான்குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் பித்ரு தர்ப்பணம்

தை அமாவாசையையொட்டி சோளிங்கர் தக்கான்குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் பித்ரு தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.;

Update: 2023-01-21 17:22 GMT

சோளிங்கர்

தை அமாவாசையையொட்டி சோளிங்கர் தக்கான்குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் பித்ரு தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

இந்தக்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று முன்னோர்களுக்கு பித்ருதர்ப்பணம் செய்வது வழக்கம். பித்ரு தர்ப்பணம் செய்வதால் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைந்து குடும்பத்திற்கு ஆசி வழங்குவதாகவும் குடும்பம் தழைக்கும் என்றும் கடன் பிரச்சினைகள் தீர்ந்து செல்வம் பெருகும், வம்சம் விருத்தியாகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசைகளில் ஆறு, குளம், நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்வது சிறப்புக்குரியதாகும்.

அதன்படி தை அமாவாசை தினமான நேற்று சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சொந்தமான பிரம்ம தீர்த்தம் என்கின்ற தக்கான் குளக்கரையில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு பித்ருதர்ப்பணம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்