தேன்கனிக்கோட்டையில் முன்விரோதத்தில் பழ வியாபாரியை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

முன்விரோதத்தில் பழ வியாபாரியை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேன்கனிக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

Update: 2023-08-23 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

கத்திக்குத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கித்வாய் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 50), பழ வியாபாரி. இவரது வீட்டின் அருகே கூலித்தொழிலாளி தபரேஸ் (36) என்பவர் வசித்து வந்தார். இவர்கள் இருவர் வசிக்கும் வீடு வாடகை வீடு என்பதால் 2 வீட்டிற்கும் ஒரே மின் மீட்டர் இருந்துள்ளது. மாதந்தோறும் மின் கட்டணம் சங்கர் செலுத்தி பாதி மின் கட்டன பணத்தை கேட்கும் போது, தபரேஸ் கொடுக்காமல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு சங்கரை அடித்துள்ளார்.

இது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் சங்கர் மின் கட்டணம் பணம் கேட்டால் என்னை தபரேஸ் அடிக்கிறார் என கூறியுள்ளார். அதனால் வீட்டின் உரிமையாளர் தபரேசை வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதில் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந் தேதி அன்று மாலை சங்கர் வீட்டில் இருந்த போது வீட்டின் உரிமையாளரிடம் கூறி என்னை வீட்டை காலி பண்ண செய்கிறாயா? என கூறி நீ இருந்தால் தானே என கூறி கத்தியால் கழுத்தில் 3 முறை அறுத்துள்ளார்.

அதில் சங்கர் படுகாயமடைந்து அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்துள்ளனர். தபரேஸ் தப்பி ஓடி உள்ளார். உறவினர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சைஅளித்தனர்.

7 ஆண்டு சிறை

இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் அப்போதைய தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த வழக்கு தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட தபரேசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ரவீந்திரநாத் ஆஜரானார்.

தேன்கனிக்கோட்டை போலீசார் தபரேசை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்