கிணத்துக்கடவு அருகே லாரி மோதி கூலிதொழிலாளி பலி

கிணத்துக்கடவு அருகே லாரி மோதி கூலிதொழிலாளி பலி;

Update: 2022-12-27 18:45 GMT

கிணத்துக்கடவு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 43). இவருக்கு பாண்டீஸ்வரி (37) என்ற மனைவியும், காளிராஜ் (20) என்ற மகனும், நந்தினி (17) என்ற மகளும் உள்ளனர். கணேசன் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன் புதூரில் உள்ள முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் வேலை பார்க்க வந்தார். சிங்கையன் புதூர்-வடபுதூர் ரோட்டில் கல் லோடு ஏற்றுவதற்காக டிப்பர் லாரி வந்தது. லாரியின் பின்பகுதியில் கணேசன் நின்று கொண்டிருந்தார். அப்போது டிப்பர் லாரி டிரைவர் பெரிய போதுவை சேர்ந்த கார்த்திகேயன் கவனிக்காமல் லாரியை பின்நோக்கி எடுத்த போது கணேசன் மீது மோதியது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீசார் கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்