மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிகளில் கோட்டாட்சியர் ஆய்வு
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிகளில் கோட்டாட்சியர் ஆய்வு
தொண்டி
திருவாடானை தாலுகா ஓரிக்கோட்டை மற்றும் சின்னத்தொண்டியில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மாணவர்களின் கற்றல் திறன் உள்ளிட்ட விவரங்களையும் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது தாசில்தார் செந்தில்வேல் முருகன், ஓரிக்கோட்டை ஊராட்சிதலைவர் காந்திமதி மகாலிங்கம், கருணை இல்ல பொறுப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் திருவாடானையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் கோட்டாட்சியர் சேக் மன்சூர் ஆய்வு செய்தார்.