ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை

திருவாடானை பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2023-06-26 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தக்காளி விலை அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு காய்கறிகள் மதுரை மாட்டுத்தாவணி மொத்த மார்க்கெட்டில் இருந்து விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. சமீபத்தில் பெய்த கோடை மழை காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்து விட்டது. குறிப்பாக திருவாடானை, தொண்டி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர் தக்காளி படிப்படியாக உயர்ந்து கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கிலோ ரூ.100-க்கு விற்பனை

இந்த நிலையில் தற்போது ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு வாகனங்களில் வீதி, வீதியாக தக்காளி கூவி விற்கப்பட்டது. தற்போது அந்த வாகனங்களை பார்க்க முடிவதில்லை. தக்காளி கிலோ 100-க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். முன்பு கிலோ கணக்கில் தக்காளி வாங்கிய இல்லத்தரசிகள் விலை உயர்வால் தற்போது தங்கள் தேவைக்கு கால் கிலோ, அரை கிலோ என தக்காளிகளை வாங்கி கொள்கின்றனர். அதே நேரத்தில் ஓட்டல்களில் தக்காளி சட்னி வைப்பது குறைந்து விட்டது.

Tags:    

மேலும் செய்திகள்