ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு ஏலம்

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு ஏலம் போனது. வரத்து இல்லாததால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-07-17 20:15 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு ஏலம் போனது. வரத்து இல்லாததால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

காய்கறி சந்தை

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் தக்காளிகளை விவசாயிகள் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இதை பொள்ளாச்சி, கோவை, கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் ஏலம் எடுத்து செல்கின்றனர். தற்போது தென்மேற்கு பருவமழை சரிவர செய்யாததால், கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து பெருமளவில் குறைந்துவிட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு 15 டன் தக்காளியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.73 வரை விற்பனையானது.

வரத்து இல்லை

அதன்பிறகு விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.108 வரை விற்பனையானது. பின்னர் படிப்படியாக விலை சற்று குறைந்து நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தக்காளி விளைச்சல் சரிவர இல்லாததாலும், ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழை காரணமாக தக்காளி வரத்து இல்லாததாலும் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்