மலைக்கிராம பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம்

வால்பாறை அருகே மலைக்கிராம பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம் நடந்தது.;

Update: 2023-10-22 20:15 GMT
வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சிந்து(வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே முடீஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர் செல்வக்குமார், டிரைவர் அரவிந்த் விரைந்து சென்று, சிந்துவை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். ஆனால் பிரசவ வலி அதிகரித்ததை தொடர்ந்து, மக்களை தேடி மருத்துவ பெண் பணியாளர் உதவியுடன் சிந்துவுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும், சேயும் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்