பண்ணாரி அருகே கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் காட்டெருமைகள்
பண்ணாரி அருகே கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் காட்டெருமைகள்;
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் ஏராளமான யானைகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளன. இதில் காட்டெருமைகள் அடிக்கடி தண்ணீரை தேடி வனப்பகுதி வழியாக செல்லும் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்துவிடுகின்றன. சில நேரங்களில் நடுரோட்டுக்கு வந்துவிடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்தில் தடுமாறுகிறார்கள். பயணிகளில் சிலர் ஆபத்தை உணராமல் காட்டெருமைகளின் அருகே சென்று செல்போனில் செல்பி எடுக்கிறார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பண்ணாரி அருகே தேசிய நெடுஞ்சாைலயோரம் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்தன. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி செல்பி எடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிவைத்தனர்.