போடிப்பட்டி
தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
தேசிய நெடுஞ்சாலை
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரம் அமைந்துள்ளது. இதனால் தினசரி கனரக வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. இந்தநிலையில் பழனியிலிருந்து உடுமலை வரும் வழித்தடத்தில் கொழுமம் சாலை பிரிவுக்கு அருகில் அரசு குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்புக்கு அரங்கில் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் தார்சாலை சேதமடைந்து மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் திடீர் பள்ளத்தால் திணறும் நிலை உள்ளது.குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பகுதியைக் கடக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
நடவடிக்கை
எனவே விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மெகா பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.