தஞ்சை மகா மாரியம்மன் கோவிலில் 1000 கிடாவெட்டி பிரமாண்ட விருந்து...!

தஞ்சை அருகே தெத்துவாசல்பட்டி மகா மாரியம்மன் கோவிலில் 60 ஆண்டுகளுக்கு பிறகு கிடாவெட்டு திருவிழா பிரமாண்ட நடைபெற்றது.

Update: 2022-07-25 10:08 GMT

வல்லம்,

தஞ்சை அருகில் உள்ள தெத்துவாசல் பட்டி கிராமத்தில் ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் கிடாவெட்டு திருவிழா வெகு சிறப்பாக நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் சாதி வேறுபாடு, பொருளாதார தட்டுபாடு காரணமாக கிடா வெட்டு திருவிழா தடைப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக அமைந்ததால் கிராம நாட்டமைக்காரர்கள் ஒன்று கூடி பேசி சாதி பேதம் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து திருவிழா நடத்துவது என முடிவு செய்தனர்.

இதனை அடுத்து 60 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வீடு 3 கிடாக்கள், 5 கிடாக்கள் என ஸ்ரீமகாகாளியம்மனுக்கு 1000 கிடாக்கள் வெட்டப்பட்டன.

கிராம மக்கள் கிடாவெட்டு திருவிழாவுக்கு வாருங்கள் என அழைப்பிதழ் அச்சடித்து உற்றார், உறவினர்கள், நண்பர்களை அழைத்து கறி குழம்பு, கறிவருவல், மீன் வருவல், முட்டையுடன் விருந்து வைத்தனர். பின்னர், வெற்றிலை தாம்புலம் கொடுத்து வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வழி அனுப்பி வைத்தனர்.

இதனால் தெத்துவாசல்பட்டி கிராமம் விழா கோலமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்