பாம்புகளின் புகலிடமாகும் அரசு பள்ளி விளையாட்டு மைதானம்

பாம்புகளின் புகலிடமாக அரசு பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளது.

Update: 2022-12-20 18:39 GMT

குன்னம்:

பாம்புகளின் புகலிடமாகும் அரசு பள்ளி விளையாட்டு மைதானம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் மருவத்தூர் செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள இந்த பள்ளிக்கு பேரளி, சித்தளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் வேப்பூர் வட்டார கல்வி அலுவலகமும் உள்ளது.

இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளையும், கோப்பைகளையும் வென்றுள்ளனர். மேலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுகளில் ஈடுபடும் வகையில் பள்ளிையயொட்டி விளையாட்டு மைதானமும் உள்ளது.

சேறும், சகதியுமாக...

ஆனால் இந்த விளையாட்டு மைதானத்தில் புற்கள், செடிகள் வளர்ந்து மண்டிக்கிடக்கிறது. மழை பெய்யும் சமயங்களில் மைதானத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த மைதானத்தை பயன்படுத்த இயலாத நிலை உள்ளதால், விளையாட்டு பாட வேளையில் கால்பந்து, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும் இந்த மைதானத்தில் அதிக அளவில் பாம்புகளும் அவ்வப்போது வந்து செல்கின்றன. இதனால் மைதானத்திற்கு செல்வதற்கே மாணவ, மாணவிகள் மிகுத்த அச்சப்படும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியே செல்ல போதுமான வசதியில்லாததால் அதிக அளவில் மழைநீர் தேங்கி கட்டிடங்களை பாதிக்கும் நிலை உள்ளது.

சீரமைக்க வேண்டும்

தற்போது, விளையாட்டு பாட வேளையில் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டும், மாணவ, மாணவிகளின் நலன் கருதியும் விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மைதானத்தை விரைந்து சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ேமலும் இது குறித்து அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்