மொபட் மீது அரசு பஸ் மோதி பெயிண்டர் கை துண்டானது
ஜோலார்பேட்டை அருகே மொபட் மீது அரசு பஸ் மோதியதில் பெயிண்டர் கை துண்டானது.
ஜோலார்பேட்டையை அடுத்த பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர் (வயது 45). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது மொபட்டிற்கு மேட்டுசக்கரகுப்பம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக்கொண்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது திருப்பத்தூர் பகுதியில் இருந்து வாணியம்பாடி நோக்கிச் சென்ற அரசு பஸ் மொபட் மீது மோதியது.
இதில் குணசேகரன் கை பஸ் சக்கரத்தில் சிக்கி துண்டானது. அவரை அங்கிருந்த பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அரசு பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.