பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.;

Update: 2023-06-17 19:30 GMT

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் நாட்ராயன். அவருடைய மனைவி விஜயா (வயது 41). இவர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர், இடையக்கோட்டை வடக்குதெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கு பின்னால் 2 போ் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென விஜயாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். அதன்பிறகு 2 பேரும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளிலேயே தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து இடையக்கோட்டை போலீஸ் நிலையத்தில் விஜயா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்