5 குட்டிகளை ஈன்ற ஆடு
தட்டார்மடம் அருகே ஆடு ஒன்று ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது
தட்டார்டம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா தட்டார்மடம் அருகே உள்ள கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தனது வீட்டில் சொந்தமாக ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.
இவர் வளர்க்கும் ஆடுகள் இரண்டு அல்லது மூன்று குட்டிகளை ஈன்று வந்தது. இந்த நிலையில்அவர் வளர்த்த ஒரு ஆடு நேற்று 5 குட்டிகளை ஈன்றது. இதில் அனைத்து குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளன. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் முத்துக்குமார் வீட்டிற்கு வந்து அந்த ஆட்டிக்குட்டிகளை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.