காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன்

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சுமார் 1000 கிலோ எடையுள்ள ராட்சத திருக்கை மீன் வலையில் சிக்கியது.;

Update: 2022-08-26 14:54 GMT

திருவொற்றியூர்:

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த கலைவாணன் என்பவரது விசைப்படகில் கடந்த 17-ந் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சுமார் 1000 கிலோ எடையுள்ள ராட்சத திருக்கை மீன் வலையில் சிக்கியது. உடனே விசைப்படகை கரைக்கு கொண்டு வந்தனர். கிரேன் மூலம் தூக்கி வெளியே கொண்டு வந்து பின்னர் ராட்சத திருக்கை மீனை ரூ. 30 ஆயிரத்திற்கு விற்பனை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்