வாலிபரை மிரட்டி பணம் பறித்த 5 பேர் கும்பல் கைது

கோவை காந்திமாநகரில் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-06-10 22:00 GMT

கணபதி

கோவை காந்திமாநகரில் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வழிப்பறி

கோவை காளப்பட்டியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சாம்பிரகாஷ் (வயது 21). இவர் சம்பவத்தன்று கணபதி காந்திமாநகரில் உள்ள ஒரு கோவில் அருகே தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென சாம்பிரகாஷிடம் பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுத்த மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் உருட்டுக்கட்டையை எடுத்து சாம்பிரகாஷை கொன்று விடுதாக மிரட்டினார். பின்னர் அந்த கும்பல் சாம்பிரகாஷிடம் இருந்த ரூ.1000-த்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

5 பேர் கும்பல் கைது

இதுகுறித்து சாம்பிரகாஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில் வாலிபரின் பணத்தை பறித்து சென்றது, ரத்தினபுரி சம்பத் வீதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (27), கணபதி காந்திமாநகரைச் சேர்ந்த கவுட்டி சியாம்குமார் என்ற சியாம் குமார் (29), விஷால் (23), வருண் காந்தி (29), சுபாஷ் என்ற சந்திரபோஸ் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்