தூத்துக்குடி அருகேவடமாநில தொழிலாளி கொலை வழக்கில் நண்பர் கைது

தூத்துக்குடி அருகேவடமாநில தொழிலாளி கொலை வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-10-17 00:15 IST

தூத்துக்குடி அருகே வடமாநில தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

அடித்துக் கொலை

ஒடிசா மாநிலம் கோபிந்த்பூர் பகுதியை சேர்நதவர் கந்தப்பெகரா. இவருடைய மகன் துஷாபந்த் பெகரா (வயது 24). இவர் தூத்துக்குடி அருகே உள்ள கொம்புக்கார நத்தம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர் ஒருவருடன் புதுக்கோட்டை பாத்திமாநகரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். சம்பவத்தன்று காலையில் துஷாபந்த் பெகரா வாயில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்த துஷாபந்த் பெகராவுடன் தங்கி இருந்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த அவரது நண்பர் எர்னஸ்பால் (42) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது

விசாரணையில், எர்னஸ்பாலின் தங்கையின் போட்டோவை துஷாபந்த் பெகரா மார்பிங் செய்து செல்போனில் வைத்து இருந்தாராம். இதனை தட்டிக்கேட்ட எர்னஸ்பாலையும், அவரது குடும்பத்தையும் அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த எர்னஸ்பால், துஷாபந்த் பெகராவை தூக்கி கட்டிலில் அடித்து உள்ளார். இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து உள்ளார். பின்னர் எர்னஸ்பால், போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டு ஒன்றும் தெரியாதது போன்று நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் எர்னஸ்பாலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்