சிறுமலையில் பற்றி எரிந்த காட்டுத்தீ
திண்டுக்கல் அருகே சிறுமலையில் காட்டுத்தீ பற்றி எரிகிறது.
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. சிறிதுநேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் தீயில் கருகின. மேலும் மலைப்பகுதியில் உள்ள மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அங்கிருந்து இடம் பெயர்ந்து வருகின்றன. தொடர்ந்து மலைப்பகுதியில் தீ எரிந்து கொண்டிருக்கிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சிறுமலை பகுதியில் சமீபகாலமாக அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.