போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதானவர் புழல் சிறையில் வெளிநாட்டு கைதி திடீர் சாவு

போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட வெளிநாட்டு கைதி திடீரென உயிரிழந்தார்.;

Update:2023-02-12 13:25 IST

வங்காள தேசம் நாட்டை சேர்ந்தவர் முகமது ஆலா ஷேக்(வயது 45). இவர், போலி பாஸ்போர்ட் வழக்கில் கடந்த மாதம் 16-ந்் தேதி கைது செய்யப்பட்டு புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கைதி முகமது ஆலா ஷேக் உயிரிழந்தார்.

இது குறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து கைதி முகமது ஆலா ஷேக், வயிற்று வலியால் தான் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்