விழுப்புரம்
விழுப்புரத்தை அடுத்த போரூர் கிராமத்தில் வெள்ளத்தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள விழல்களுக்கு நேற்று மாலை மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ அருகிலிருந்த கரும்பு பயிர்களுக்கு பரவும் அபாய நிலை ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்த அன்னியூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் விழல்கள் எரிந்து சேதமடைந்தது.