தோட்டத்தில் தீ விபத்து
குலசேகரன்பட்டினத்தில் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.;
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருக்குச் சொந்தமான தோட்டம் குலசேகரன்பட்டினம் செல்லும் சாலையில் உள்ளது. தோட்ட த்திற்கு நேற்று மதியம் மர்மநபர்கள் தீவைத்து சென்று விட்டனர். பலத்த காற்று வீசியதால் தீ வேகமாக பரவி எரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து நிலைய அலுவலர் நட்டார்ஆனந்தி தலைமையில் வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.