நடையனூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் அருகே குப்பைகள் குவிந்து கிடந்தது. இந்தநிலையில் நேற்று மாலை குப்பையில் திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, குப்பையில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.