அறந்தாங்கி அருகே தைல மரக்காட்டில் தீ விபத்து

அறந்தாங்கி அருகே தைல மரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2023-04-04 18:23 GMT

அறந்தாங்கியை அடுத்த சிலட்டூர் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 55), விவசாயி. இவருக்கு எரிச்சி-சிதம்பர விடுதி அருகே 3 ஏக்கரில் தைல மரக்காடு உள்ளது. நேற்று முன்தினம் இவரது தைலமரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தீயணைப்பு நிலைய அலுவலர் வெற்றிச்செல்வம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்