ஓய்வுபெற்ற அரசு அலுவலர் வீட்டில் தீ விபத்து

தியாகதுருகத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர் வீட்டில் தீ விபத்து;

Update: 2023-04-12 18:45 GMT

தியாகதுருகம்

தியாகதுருகம் கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே வசித்து வருபவர் சுரேஷ்குமார்(வயது 63). ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரான இவர் நேற்று இரவு தனது வீ்ட்டின் மாடியில் தனியாக இருந்தபோது திடீரென அங்கிருந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் அலறியடித்துக் கொண்டு கீழே ஓடி வந்தார்.

பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலை அலுவலர் கவிதா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்