வல்லம்
தஞ்சையை அடுத்துள்ள குருங்குளம் பகுதியில் ஜெய்சங்கர் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஜெய்சங்கர் கடை தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் தீவிபத்தில் கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மளிகை பொருட்கள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம்? குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.