குப்பை கிடங்கில் தீ விபத்து

குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2022-07-11 17:51 GMT

லாலாபேட்டை அருகே உள்ள சிந்தலவாடி ஊராட்சி சார்பாக அள்ளப்படும் குப்பைகள் அதே பகுதியில் குப்பை கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மர்மநபர்கள் சிலர் அந்த குப்பை கிடங்கிற்கு தீ வைத்துள்ளனர். இதனால் தீ மளமளவென பரவி அந்த பகுதியை புகைமண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பக்கத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் தப்பியது. இதனால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்