பறவைகளை வேட்டையாடியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

பறவைகளை வேட்டையாடியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2022-12-02 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவளர் சதீஷ், நாகை வனஉயிரினக் காப்பாளர். யோகேஷ்குமார் மீனா உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர்.அயூப்கான் தலைமையில் வனவர்கள் ராமதாஸ், மகாலட்சுமி, வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், வேட்டை தடுப்பு காவலர்கள், நிர்மல்ராஜ், பாண்டியன், ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் நேற்று செட்டிப்புலத்தில் வயல்வெளியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார்(வயது43) என்பவர் வயல்வெளியில் வலைவைத்து மடையான் பறவைகளை வேட்டையாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்