சேவை குறைபாடு:தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

வாடிக்கையாளர் சேவை குறைபாடுடன் செயல்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தவிட்டது.;

Update: 2023-06-11 19:15 GMT

நாகர்கோவில்:

வாடிக்கையாளர் சேவை குறைபாடுடன் செயல்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தவிட்டது.

சேவை குறைபாடு

கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் ரவி சாம் பேனர்ஜி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது சேமிப்பு கணக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் பணத் தேவைக்காக நாகர்கோவிலில் உள்ள மற்றொரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம்.மில் ரூ.5 ஆயிரம் எடுத்தபோது பணம் வரவில்லை. ஆனால் அவரது செல்போனுக்கு பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல்கள் வந்துள்ளது.

உடனே தான் சேமிப்புக்கணக்கு வைத்திருந்த வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் இரு நாட்களில் அந்த பணம் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும் என்று கூறியுள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்கவில்லை.

ரூ.15 ஆயிரம் அபராதம்

இதனால் ரவி சாம் பேனர்ஜி சம்பந்தப்பட்ட வங்கிக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ரவி சாம் பேனர்ஜி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி நஷ்டஈடுடாக ரூ.15 ஆயிரமும், வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்