மாட்டின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
மாட்டின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடமாடும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு பலர் காயம் அடைந்து வருகிறார்கள். இதனால் சாலையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக நடமாடும் மாடுகளை பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வந்தனர். இந்தநிலையில் தொடர்ந்து கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் பிடிப்படும் கால்நடைகளின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் சிவகாசி பஸ் நிலையம் அருகில் உள்ள காந்தி ரோட்டில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக மாடு நடமாடிக்கொண்டு இருந்தது. இதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பிடித்து கட்டி போட்டனர். பின்னர் அதன் உரிமையாளர் வேல்முருகன் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.