இருதரப்பினர் பயங்கர மோதல்; 5 பேருக்கு அரிவாள் வெட்டு

திசையன்விளையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர கோஷ்டி மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2023-06-24 19:38 GMT

திசையன்விளை:

திசையன்விளையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர கோஷ்டி மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்விரோதம்

நெல்லை மாவட்டம் திசையன்விளை கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன்கள் நவீன்குமார் (வயது 25), மணிகண்டன் (19), விஜி மகன் சந்துரு (18), மணலிவிளை பகுதியைச் சேர்ந்த சுேரஷ்குமார் மகன் முத்துக்குமரன் (18), திசையன்விளை இசக்கியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமார் மகன் சக்திவேல் (20).

இவர்களுக்கும் திசையன்விளை மகாதேவன்குளத்தை சேர்ந்த கணேசன் மகன்கள் கசுரன் (19), தர்சன் (18) மற்றும் 2 சிறுவர்கள் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

5 பேருக்கு வெட்டு

இந்த நிலையில் சம்பவத்தன்று கசுரன், முத்துக்குமரனை செல்போனில் தொடர்பு கொண்டு தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமரன் தரப்பினர் மகாதேவன்குளத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு வைத்து இருகோஷ்டியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பயங்கரமாக நடந்த இந்த மோதலில் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டும், கம்பியால் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கோஷ்டி மோதலில் நவீன்குமார், மணிகண்டன், சந்துரு, கசுரன், தர்சன் உள்ளிட்ட சிலர் காயம் அடைந்தனர்.

4 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருதரப்ைப சேர்ந்த கசுரன், முத்துக்குமரன் மற்றும் 2 சிறுவர்கள் என 4 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் திசையன்விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்