பெண் கைதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

வேலூர் அரசு மருத்துவமனையில் பெண் கைதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.;

Update: 2023-09-24 17:14 GMT

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய பெண்கள் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 100-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்கில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த தேனிமாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த பேயதேவன் மனைவி 6 மாத கர்ப்பிணியான நாகரத்தினம் (வயது 30) என்பவர் கடந்த ஜூன் மாதம் நிர்வாக காரணங்களால் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

கர்ப்பிணியான அவர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நாகரத்தினத்துக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஜெயில் காவலர்கள் உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நாகரத்தினத்துக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நாகரத்தினம் அனுமதிக்கப்பட்டுள்ள பிரசவ வார்டை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்