குள்ளஞ்சாவடி அருகே அழுகிய நிலையில் விவசாயி பிணம்

குள்ளஞ்சாவடி அருகே அழுகிய நிலையில் விவசாயி பிணம் கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-19 17:07 GMT

குறிஞ்சிப்பாடி, 

குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன்பேட்டை ரோட்டு தெருவை சேர்ந்தவர் திருசங்கு (வயது 52). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து திருசங்குவை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவரை பற்றிய எந்தவொரு தகவலும் தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று அம்பலவாணன்பேட்டை ரெயில்வே தண்டவாளம் பகுதியில் உள்ள ஓடை அருகே திருசங்கு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருசங்குவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருசங்கு சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்