மது குடிக்க பணம் தர மறுத்த விவசாயி மண்டை உடைப்பு; மகன் கைது

மது குடிக்க பணம் தர மறுத்த விவசாயி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்.

Update: 2022-12-23 13:33 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் புஜ்ஜிரெட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டி ஜெகநாதன் (வயது 70). விவசாயி. இவருக்கு கன்னியப்பன், பழனி என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகனான பழனிக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது

குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி தனது பெற்றொரிடம் தகராறு செய்து வந்தாதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி பழனி குடிபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது குட்டி ஜெகநாதன் மதுகுடிக்காமல் வேலைக்கு செல்லுமாறு பழனிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பழனி அருகில் இருந்த இரும்பு கம்பியால் தந்தையை பலமாக தாக்கியுள்ளார்.

இதில் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்த குட்டி ஜெகநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து குட்டி ஜெகநாதனின் மூத்த மகன் கன்னியப்பன் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தந்தையை தாக்கிய பழனியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்