பள்ளிப்பட்டு அருகே மினிவேன் மோதி விவசாயி பலி

பள்ளிப்பட்டு அருகே நூல் பண்டல்களை ஏற்றி வந்த மினிவேன் ஒன்று நடந்துசென்ற விவசாயி மீது மோதிய விபத்தில் பரிதாபமாக பலியானார்.;

Update: 2022-07-23 05:31 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா குமாரராஜூப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 53). விவசாயி. இவர் நேற்று காலை தனது வயல்வெளிக்கு செல்வதற்காக பள்ளிப்பட்டு-சோளிங்கர் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கரூரில் இருந்து நூல் பண்டல்களை ஏற்றிக் கொண்டு மின்வேன் ஒன்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஏகாம்பரகுப்பம் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், வாகனம் விவசாயி சேகர் பின்னால் பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் துடி, துடித்து பரிதாபமாக செத்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கரூர் மாவட்டம் மண்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வாகனத்தை ஒட்டி வந்த டிரைவர் கோவிந்தராஜ் என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்