கால்வாய் கரையில் பிணமாக கிடந்த விவசாயி

அஞ்சுகிராமம் அருகே கால்வாய் கரையில் விவசாயி பிணமாக கிடந்தார்.;

Update: 2023-10-12 18:45 GMT

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் அருகே கால்வாய் கரையில் விவசாயி பிணமாக கிடந்தார்.

அஞ்சுகிராமம் அருகே உள்ள ஜேம்ஸ் டவுண் பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது59), விவசாயி. இவருக்கு பிரேமா (55) என்ற மனைவியும், சுடலைமணி (37) என்ற மகனும் உண்டு. பெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் நேற்றுமுன்தினம் மாலையில் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் இரவு வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் நேற்று காலையில் திருமூலநகர் கால்வாய் கரையில் சாலையோரம் பெருமாள் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து பிரேமாவுக்கு தகவல் கூறினர். பிரேமா தனது மகனுடன் விரைந்து வந்து பிணத்தை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்