மகளிர் குழு உருவாக்கிய பண்ணை தோட்டம்
ஒலக்கூரில் மகளிர் குழு உருவாக்கிய பண்ணை தோட்டத்தை கலெக்டர் மோகன் பார்வையிட்டார்.
திண்டிவனம்:
ஒலக்கூரில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் வேளாண்மை உழவர் உற்பத்தி நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பசுமை குடில் அமைத்து மரக்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்வதையும், தரிசு நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் மகளிர் குழுவினர் பண்ணை தோட்டம் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்து வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், ஊரக வளர்ச்சி துறை உதவி திட்ட அலுவலர் சபானா, ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதாலட்சுமி, ராமதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.