கூடலூர் அருகே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கூடலூர் அருகே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2022-07-08 13:57 GMT

கூடலூர் 




கூடலூர் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கூடலூரில் இருந்து சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் உள்ள 8-ம் மைல் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இந்த சமயத்தில் கூடலூரில் இருந்து பாட்ட வயலுக்கு பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

அதிர்ஷ்டவசமாக சுமார் 50 அடி தூரத்தில் மரம் சரிந்து விழுந்ததால் பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். தொடர்ந்து கூடலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மரத்தை அறுத்து அகற்றினர். இதைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்