மின்சாரம் தாக்கிய மகனை காப்பாற்ற முயன்ற தி.மு.க.பிரமுகர் பலி
மின்சாரம் தாக்கிய மகனை காப்பாற்ற முயன்ற தி.மு.க.பிரமுகர் பலியானார்.;
வந்தவாசி
வந்தவாசி மீராகாதர்ஷா தெருவைச் சேர்ந்தவர் இப்ராகிம்ஷா (வயது 65). தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவரது மகன் அன்சாரி (35) திங்கள்கிழமை காலை வீட்டு மாடிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டை ஒட்டிச் சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது இவரது கை தவறுதலாக பட்டுள்ளது. இதில் அன்சாரியை மின்சாரம் தாக்கியது.
அருகிலிருந்த தந்தை இப்ராஹிம்ஷா ஓடிச் சென்று அன்சாரியை பிடித்து இழுத்து தரையில் தள்ளினார். அப்போது இப்ராஹிம்ஷா மீது மின்சாரம் தாக்கியதில் அவர் உடல் கருகி அதே இடத்திலேயே இறந்தார்.
பலத்த காயமடைந்த அன்சாரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இது குறித்து வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.