சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

சீர்காழி அருகே, சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-08-21 17:53 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே, சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்த்தேக்க தொட்டி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஊராட்சி, புங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட காடாக்குடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காடாக்குடி சாலையோரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சீரமைக்க கோரிக்கை

இந்தநிலையில், இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களின் அடிப்பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து கிடக்கின்றன. மேலும், நீர்த்தேக்க தொட்டியின் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இந்த நீர்த்தேக்க தொட்டி அதன் பலத்தை இழந்து இடிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.எனவே, ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன்பு சிதிலமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்