சாலையோரம் செத்து கிடந்த மான்
தென்காசியில் சாலையோரம் மான் செத்து கிடந்தது.;
தென்காசியில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் மேல மெஞ்ஞானபுரம் அருகில் சாலை ஓரமாக நேற்று மாலை ஒரு மான் செத்து கிடந்தது. முள்வேலியில் அடிபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையம் வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி அடக்கம் செய்தனர்.