கிணற்றில் தவறி விழந்த பசு மாடு உயிருடன் மீட்பு
ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
ஜோலார்பேட்டையை அடுத்த பெரிய கம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவரது பசுமாடு ஒன்று வீட்டின் அருகே உள்ள 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் நேற்று தவறி விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமாரின் குடும்பத்தினர் இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்த கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.